சிந்து சமவெளி படத்திற்கு பிறகு மீண்டும் A சர்டிபிகேட் படத்தில் நடிக்கும் அமலா பால் !


மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆடை.இந்த படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தை V ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் Firstlook சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் நிறைவடைந்தது.இதனை அடுத்து தற்போது இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இந்த படத்திற்கான சென்சார் வேலைகள் நிறைவடைந்து இந்த படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.சிந்து சமவெளி படத்தை அடுத்து அமலா பால் நடிக்கும் A சர்டிபிகேட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பேஜ்ஜை லைக் செய்யவும்