படமே இன்னும் முடியாத நிலையில், பிகில் இத்தனை கோடியை ஈட்டியுள்ளதா? புதிய மைல்கல்


தளபதி விஜய்யின் மெர்சல் படம் ஹிட் ஆனதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார். கால்பந்தை மையப்படுத்திய இந்த படத்திற்கு பிகில் என பெயர் வைத்துள்ளனர்.

படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் பிசினஸை துவங்கியுள்ளது.

தமிழ்நாடு உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதற்காக அவர்கள் 80 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் ஆடியோ உரிமை 3.5 கோடி, டிவி உரிமை மூலம் 30 கோடி வரை தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி வெளிநாட்டு உரிமை, கேரளா ரைட்ஸ், கர்நாடக ரைட்ஸ், ஹிந்தி டப்பிங்/ரீமேக் ரைட்ஸ் என தயாரிப்பாளர் தற்போதே 220 கோடி ருபாய் வரை ஈட்டியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பேஜ்ஜை லைக் செய்யவும்