ஜோதிகா : மெர்சல் படத்தில் இருந்து இந்த காரணத்திற்காக தான் வெளியேறினேன்! அவரே கூறிய பதில்


நடிகை ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக திருமலை, குஷி போன்ற ப்ளாக்பஷ்டர் படங்களில் நடித்தவர். அதன் பிறகு 2017ல் வெளிவந்த மெர்சல் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார். அதன்பிறகு நித்யா மேனன் அந்த ரோலில் நடித்தார்.

இந்நிலையில் ஜோதிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது பற்றி பேசியுள்ளார். “படத்தின் ஸ்கிரிப்ட் பற்றி எனக்கும் இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் தான் படத்தில் இருந்து விலகிவிட்டேன். creative difference மட்டும் தான் காரணம்” என அவர் கூறியுள்ளார்.

இந்த ரோலுக்காக நித்யா மேனன் பிலிம்பேர் சிறந்த நடிகை விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பேஜ்ஜை லைக் செய்யவும்