விஜய்-அஜித்திற்கு அது தேவையில்லை, ஆனால் எனக்கு அது வேண்டும்- பிரபல நடிகர் கருத்து தெரிவித்துள்ளார்


தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர்கள் விஜய்-அஜித். இவர்கள் படங்களுக்கு வரும் கூட்டம் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் தான் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் ப்ரோமோஷனில் அவரிடம் ‘ஏன் வித்தியாசத்தை தேடி போகிறீர்கள்?’ என கேட்டனர்.

அதற்கு அவர் ‘விஜய்-அஜித் படங்களுக்கு கதை கூட தேவையில்லை, படம் நன்றாக உள்ளதோ, இல்லையோ முதல் ஆளாக எல்லோரும் சென்றுவிடுவோம்.

தலதளபதி அந்த பெயர்கள் போதும் ,ஆனால், என் படத்திற்கு கொஞ்சம் வித்தியாசம் இருந்தால் தான், பலரையும் உள்ளே வர வைக்க முடியும்’ என பதில் அளித்துள்ளார்.


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பேஜ்ஜை லைக் செய்யவும்