ஆடை படப்பிடிப்பில், ஆடை இல்லாமல் நடித்த போது அமலாபாலுக்கு நடந்த திக்திக் நிமிடங்கள்


ஹீரோயினை மையப்படுத்தி நகரும் ஆடை படத்தின் டீசர் நடிகை அமலாபாலின் நடிப்பில் முன்னதாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது போல் இதன் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமலாபால், பெண்களை மையப்படுத்தி என்னிடம் வந்த பல கதைகள் பொய்யாகவே இருந்தன. அதனால் நான் திரைத்துறையிலிருந்து விலகவும் முடிவு செய்திருக்கிறேன்.

ஆடையில்லாமல் நடிக்கும் காட்சி படமாக்கப்படும் நேரம் நெருங்கும்போது தான் எனக்குள் ஒருவித பதற்றம் இருப்பது தெரிய வந்தது. அப்போது எனது மேலாளரிடம் எவ்வளவு பேர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார்கள் என்று கேட்டேன். அந்த குறிப்பிட்ட காட்சி படமாக்கப்படும் போது செட்டில் கேமராமேன் உட்பட 15 பேர் தான் இருந்தார்கள். லைட் மேன் உட்பட பணியாற்றும் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அனைவரது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அப்போது உடனிருந்தவர்கள் மீது இருந்த நம்பிக்கைதான் பாதுகாப்பு உணர்வானது. பாஞ்சாலிக்கு 5 கணவர்கள் என்று சொல்வார்கள். அதுபோல் எனக்கு 15 பேர் கணவர்களாக இருப்பதாக உணர்ந்தேன். அவர்கள் கொடுத்த பாதுகாப்பான உணர்வுதான் என்னை பயமின்றி நடிக்க வைத்தது என கூறியுள்ளார்.


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பேஜ்ஜை லைக் செய்யவும்