பாகுபலி, 2.0 படங்களின் சாதனையை முறியடித்த தளபதி விஜய்யின் பிகில் படம்! மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்


தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும் ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாகவும் விளங்குபவர் தளபதி விஜய். அட்லீ இயக்கிவரும் பிகில் படத்தில் நடித்துவருகிறார். AGS நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் சீரான வரவேற்பை பெற்றது. தளபதியின் பிறந்தநாளன்று வெளியான இந்த போஸ்டர்கள் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து டீஸருக்கு காத்துருக்கின்றனர் ரசிகர்கள்.

தற்போது வெளியான சுவையூட்டும் செய்தி என்னவென்றால், அயல்நாடுகளில் 100 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு, விநியோக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்திய படம் எனும் பெருமையை பெற்றுள்ளது. பாகுபலி, 2.0 போன்ற படங்களின் சாதனையை முறியடித்துள்ளது பிகில்.

பொதுவாகவே விஜய் படங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பிருக்கும், அந்த வரிசையில் பிகில் மகுடம் சூட்டும் படமாக அமையும் என்று நெருங்கிய திரை வட்டாரங்களிலிருந்து செய்தி வெளியானது.


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பேஜ்ஜை லைக் செய்யவும்