சேரன் மீது செருப்பை கூட வீசுவேன்! என கவின் லொஸ்லியாவிடம் ஆவேசமாக பேசினார்.விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின், லொஸ்லியா, சாக்ஷி இடையிலான நட்பு பரபரப்பாக பேசப்பட்டாலும், கவின் லொஸ்லியா டிராக் அவ்வப்போது ரசிக்கும்படியாக அமைந்துவிடுகிறது.

பிக் பாஸ் வீட்டில் 32ம் நாள் காலை, வரும் வாரத்திற்கான நாமினேஷனில் தனது பெயரை முன்மொழியும்படி லொஸ்லியா கவினிடம் கோரிக்கை வைத்தார். இந்த வாரம் அதிக தவறுகள் செய்து நாமினேட் ஆகப்போகிறேன் என லொஸ்லியா கூற, இந்த பிக் பாஸ் வீட்டிலேயே எல்லோரையும் விட அதிகபடியான தவறுகள் செய்வதற்கு என்னை அடிச்சிக்க முடியாது என கவின் கூறினார்.

இதில் கொந்தளித்த லொஸ்லியா, என் பேர சொல்லுவியா மாட்டியா? பாரு நான் பெரிய தப்பா பண்ணிட்டு போ போறேன் என்றார். நீ இங்க இருந்த போகாம இருக்க, உன்னவிட பெரிய தப்பா நான் பண்ணுவேன், நாட்டாமை(சேரன்) மேல செருப்பு கூட வீசுவேன் என ஆவேசமாக பேசினார்.

இந்த குட்டி சண்டையை பார்க்கும்போது, இவர்கள் இருவருமே இப்போதைக்கு இந்த வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என மக்களை யோசிக்க வைத்தனர் எனலாம்.


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பேஜ்ஜை லைக் செய்யவும்